1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்
  6. டாலர் மதிப்பு உயர்வு

Forex, dollar, Foreign Exchange market, | டாலர் மதிப்பு உயர்வு

அந்நிய செலவாணி சந்தை
மும்பை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று நிலைமை மாறியது. டாலரின் மதிப்பு அதிகரித்தது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.

காலை வர்த்தகம் தொடங்கும் போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்தது.

இன்று 1 டாலரின் விலை ரூ.48.68 ஆக அதிகரித்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 20 பைசா அதிகம். வெள்ளிக் கிழமை டாலரின் இறுதி விலை 1 டாலர் ரூ.48.48 ஆக முடிவுற்றது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை நிலவுகிறது. இந்திய பங்குச் சந்தையில் காலையில் சென்செக்ஸ் 100 புள்ளிகள், நிஃப்டி 24 புள்ளி சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. இதனால் அந்நிய முதலீடு வெளியேறலாம் என்பதுடன், மற்ற அந்நிய செலவாணி சந்தைகளில் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. அத்துடன் இறக்குமதியாளர்களும் டாலரை வாங்குகவதால், ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
About Writer
Webdunia