2வது நாளாக சரியும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று 2வது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்தது
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 140 புள்ளிகள் வரை சரிந்து 61650 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 40 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 375 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வாரத்தின் கடைசி நாள் பங்கு சந்தை சரிந்தாலும், திங்கள் முதல் மீண்டும் பங்கு சந்தை வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Edited by Siva