ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (13:26 IST)

பங்குச்சந்தை இன்று மீண்டும் முன்னேற்றம்.. சென்செக்ஸ் 63 ஆயிரத்தை நெருங்குகிறது!

share
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்து 62 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 70 புள்ளிகள் அதிகரித்து 18675 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்னர் பொருளாதார நிபுணரிடம் ஆலோசனை கேட்டு எந்த பங்கில் முதலீடு செய்யலாம் என்பதை அறிந்து அதன்பின் முதலீடு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva