1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (11:43 IST)

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சுமார் 500 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் சரிவில் உள்ளது என்பதும் சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 480 புள்ளிகள் சரிந்து 73 ஆயிரத்து 184 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 175 புள்ளிகள் சரிந்து 22,140 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து வருவது முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் ஐடிசி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
Edited by Siva