நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
நேற்று பங்குச்சந்தை 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட அதே 500 புள்ளிகள் பங்குச்சந்தை ஏற்றம் கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இன்று காலை பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 465 புள்ளிகள் உயர்ந்து 71,528 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 125 புள்ளிகள் உயர்ந்து 21,738 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா,மணப்புரம் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஐடி பீஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
Edited by Siva