உச்சம் செல்லும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 734 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 19,476 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிப்டி 20 ஆயிரத்தையும் சென்செக்ஸ் 66 ஆயிரத்தையும் நெருங்கி உள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் இன்னும் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva