1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market sensex and nifty status

தொடர்ச்சியாக உயர்ந்துவரும் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 65000ஐ  தாண்டி வரலாற்று சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தை 70 புள்ளிகள் உயர்ந்து 65,278 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்பாட்டி 10 புள்ளிகள் உயர்ந்து 19331 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில் பலர் லாபத்தை புக் செய்து வருவதால் பங்குச்சந்தை குறையவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி நிலைப்பு செய்யப்படவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு..!