2 நாள் ஏற்றத்திற்கு பின் மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?
பங்குச்சந்தை இந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் உயர்ந்த நிலையில் இருந்து, இன்று திடீரென சரிந்தது, முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்ததால், லட்சக்கணக்கில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இந்த வாரம் இரண்டு நாட்கள் பங்குச்சந்தை உயர்ந்ததால் ஓரளவு நஷ்டம் ஈடு கட்டப்பட்டது.
இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவில் இருப்பதாகவும், குறிப்பாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 254 புள்ளிகள் சரிந்து 80,114 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருவதாகவும், அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 63 புள்ளிகள் சரிந்து 24,001 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் விப்ரோ, ஐஆர்சிடிசி, எல்அண்ட்டி, ஐடிஎப் சி பஸ்ட் பேங்க், டால்மியா பாரத், மனப்புறம் பைனான்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், சிப்லா, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva