தொடர்புடைய செய்திகள்
- நம்மில் ஒருவர், நமக்கான தலைவர்! – ட்ரெண்டாகும் எடப்பாடியாரின் புதிய ஸ்லோகன்!
- மனைவியின் அலுவலகத்திற்கு வந்து கத்தியால் குத்திய கணவன்...
- தனிமைப்படுத்துறீங்க சரி.. எதுக்கு தகரம் வெச்சு அடைக்கிறீங்க? – உயர்நீதிமன்றம் கேள்வி!
- பள்ளிக்கூடங்களை திறக்க இது சரியான நேரம் இல்லை! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
- நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் ஆட்டம் காட்டும் தங்கம் விலை!!
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 55 குறைந்து ரூ.4,805 விற்பனையாகிறது.
