தொடர்புடைய செய்திகள்
- எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் தங்கம் தென்னரசு
- நாளை முதல் சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமானம்..நிறைவேறிய நீண்டநாள் கோரிக்கை..!
- சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!
- 'டே பாதர் என்னடா இதெல்லாம்'… தந்தையை ஜாலியாகக் கலாய்த்த அஸ்வின்!
- சிறந்த இயக்குனர் பா ரஞ்சித்… சிறந்த நடிகர் விஜய் சேதுபதி –சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் பட்டியல்!
தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று மட்டும் எவ்வளவு குறைந்தது? சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீப காலமாக குறைந்து கொண்டே வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று ஒரு கிராம் 65 ரூபாய் குறைந்த நிலையில் இன்று ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்திருப்பதாகவும் ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து இருப்பதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய் 7,040 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து ரூபாய் 56,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,683 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,464 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
