வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2024 (09:49 IST)

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

Gold
இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 55 ரூபாயும், ஒரு சவரனுக்கு 440 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்தவுடன் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், அந்த பணத்தை எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ரூபாய்   7,220 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 440 குறைந்து ரூபாய்  57,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7725 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,800 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 102.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  102,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

 
Edited by Siva