Daily Horoscope
✕

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. மீண்டும் ரூ.55,000க்குள் ஒரு சவரன்..!

Written By Siva
Updated: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (10:17 IST)
தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்ததால் ஒரு சவரன் 55 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையான நிலையில் இன்று மீண்டும் இறங்கி உள்ளதாகவும் 55 ஆயிரத்திற்குள் ஒரு சவரன் நகை விற்பனையாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய்   6,865 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து  ரூபாய் 54,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,320 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,680 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 97.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  97,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 

எல்லாம் காட்டு

5 நிமிஷத்தில் விற்று தீர்ந்த iPhone Duo!.. பயணர்கள் அதிர்ச்சி...

AI Data Center அமைக்க 2 லட்சம் மரங்களை வெட்டிய Google!.. பின்லாந்தில் அதிர்ச்சி...

பசுமை தமிழகம் நோக்கி தமிழக அரசு: 1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை!

வெளிநாடு செல்ல முயன்ற வீரமணி மகள் தடுத்து நிறுத்தம்!.. விமான நிலையத்தில் பரபரப்பு!..

தமிழக அரசு கல்லூரிகளில் ரோபோக்கள் லேப்... மாணவர்களுக்கு இனி சர்வதேச வேலை உறுதி -

அடுத்த கட்டுரையில்
Show comments