Daily Horoscope
✕

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏற்றம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 11 ஜூன் 2024 (11:21 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து  ரூபாய்  6,645 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 53,160 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,115 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,920 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 95.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 95,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

என்னது புடவையா?.. கொச்சைப்படுத்தாதீங்க ப்ளீஸ்!.. நயினார் நாகேந்திரன் ரியாக்சன்..

அமைச்சர்கள் அறையிலேயே மின்வெட்டு!.. தலைமை செயலகத்தில் பரபரப்பு...

லவ் டார்ச்சர்!.. இளம்பெண் தற்கொலை!.. வாலிபர் கல்லால் அடித்துக் கொலை!..

முதல்வர் விஜய் ஆங்கில உச்சரிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்: ப சிதம்பரம்

மெட்ரோவில் 48 வயது நபரை தள்ளிவிட்டதில் மரணம்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மகனும் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments