Daily Horoscope
✕

இன்றைய தங்கம், வெள்ளி விலையில் என்ன மாற்றம்.. சென்னை நிலவரம் இதோ:

Written By Siva
Updated: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (12:24 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெள்ளை விலை ஒரு கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 5840.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 46720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6310.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50480.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 76.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: நவம்பர் முதல் வார மழை நிலவரம் என்ன?

முதல்முறையாக மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் புதிய ஒப்பந்த முறை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

காதலை கைவிட மறுத்த 13 வயது சிறுமி கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளையும் பிடித்த தமிழ்நாடு காவல்துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments