1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

மூன்று நாட்கள் ஏற்றத்திற்கு பின் மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் வெள்ளி விலை என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 5915.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து  ரூபாய் 47320.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6385.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 51080.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
வேலை தேடி வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை! வடமாநில இளைஞர்கள் தப்பி ஓட்டம்! – திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!