வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (16:33 IST)

உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய சூர்யா

surya
தன் ரசிகர் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, நேரடியாக அவரது வீட்டிற்குச் சென்று அவருக்கு இரங்கல் கூறியதுடன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை எண்ணூரைச் சேர்ந்த நடிகர் சூர்யா ரசிகர் சாலை விபத்தில்  உயிரிழந்தார்.

சாலை விபத்தில் தன் ரசிகர் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, நேரடியாக அவரது வீட்டிற்குச் சென்று அவருக்கு இரங்கல் கூறியதுடன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.