1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (10:48 IST)

ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்தது தஙக்ம் விலை.. இன்னும் குறையுமா?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தங்கம் விலை ஒரு கிராம் நேற்று 5,600 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 5590 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் 44,800 என விற்பனையான நிலையில் இன்று 44,720 என விற்பனையாகி வருகிறது. 
 
தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் 5500 க்கு மேல் விற்பனையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இன்று 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் 6060 என்றும் ஒரு சவரன் 48,480 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து 79.80 என்றும் ஒரு கிலோ 79 ஆயிரத்து 800 என்று விற்பனையாகி வருகிறது.
 
 
 
Edited by Mahendran