Daily Horoscope
✕

தொடர்ந்து சரியும் தங்கம் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Written By Mahendran
Updated: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:52 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4725.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 37800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5127.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41016.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 62.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 62400.00 எனவும் விற்பனையாகி வருகிறது

எல்லாம் காட்டு

பறவைக் காய்ச்சல் பீதி!.. கோழி இறைச்சி விற்பனை பாதிப்பு....

கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை 50,500 டாலரா? - ராஜ்மோகன் விளக்கம்...

உலகில் செல்வாக்குமிக்க முஸ்லீம்கள்!.. டாப் 500 பட்டியலில் யார்? யார்?..

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுகவிடம் காசு இல்லை... இது புதுசா இருக்குண்ணே!...

அப்படி பாத்தா மொத்த தவெகவும் ஜெயில்லதான் இருக்கணும்!.. சீமான் கோபம்....

அடுத்த கட்டுரையில்
Show comments