1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Silver Crash or Buying Opportunity? Prices Sink by Rs 2 Lakh from 2026 Record High

மூன்றே மாதங்களில் 2 லட்ச ரூபாய் வரை சரிந்த வெள்ளி விலை.. வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

வெள்ளி விலை வீழ்ச்சி
வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி வீழ்ச்சி முதலீட்டாளர்களிடையே கலக்கத்தையும் அதே சமயம் ஒரு புதிய வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிலோ வெள்ளி 4.39 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது அதன் விலையிலிருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் வரை சரிந்து, 2.40 லட்சம் ரூபாய்க்கும் கீழே வர்த்தகமாகிறது. வெறும் மூன்று மாதங்களில் ஏற்பட்டுள்ள இந்த 46 சதவீத வீழ்ச்சி, சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள், வலுவடைந்து வரும் அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் கடுமையான நிதி கொள்கைகள் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. 
 
வழக்கமாக தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், தற்போதைய பொருளாதார சூழலில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்யவும் ரொக்க இருப்புக்களை அதிகரிக்கவும் முற்படுவதால் விற்பனை அழுத்தம் அதிகரித்துள்ளது.
 
இருப்பினும், இந்த விலை சரிவை ஒரு முதலீட்டு வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர். வெள்ளி ஒரு தொழில் துறை சார்ந்த உலோகமாகவும் இருப்பதால், அதன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் நிலவும் தேவையாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவும் உற்பத்தி பற்றாக்குறையாலும் நீண்ட கால அடிப்படையில் வெள்ளி மீண்டும் ஏற்றம் காண வாய்ப்புள்ளது. 
 
எனவே, தற்போதைய சரிவை பயன்படுத்தி சிறுக சிறுக வெள்ளியில் முதலீடு செய்வது லாபகரமாக அமையலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
3 நாட்களில் 54 பேரை கடித்த பாம்புகள்!.. கேரளாவில் அதிர்ச்சி...