தொடர்புடைய செய்திகள்
- ஏஐ அச்சத்தால் ஐடி பங்குகள் சரிவு.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சி!
- புரோக்கிங் நிறுவன பங்குகள் கடும் சரிவு: ரிசர்வ் வங்கியின் கிடுக்கிப்பிடி!
- 2வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!
- போர் பதட்டம் இருந்தாலும் பங்குச்சந்தையில் பதட்டம் இல்லை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
- போர் பதட்டம் இருந்தாலும் பங்குச்சந்தையில் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
மூன்று நாட்களில் சுமார் 33.9% உயர்வு.. உச்சத்திற்கு சென்றது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகள்..!
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகள் கடந்த மூன்று நாட்களில் சுமார் 33.9% உயர்ந்து முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் ஓலா பங்குகள் ஏறுமுகமாகவே காணப்படுகின்றன. இந்த அதிரடி உயர்வின் மூலம், மின்சார வாகன துறையில் உள்ள மற்ற நிறுவனங்களை விட ஓலா 4.67% கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் சந்தையில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஏப்ரல் 10 நிலவரப்படி, ஓலா பங்குகள் அதன் முந்தைய சரிவுகளிலிருந்து மீண்டு வலுவான நிலையில் வர்த்தகமாகின்றன.
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மீதான நம்பிக்கை ஆகியவை இந்த அபார வளர்ச்சிக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
குறுகிய காலத்தில் 33% லாபத்தை ஈட்டியுள்ளதால், பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் கவனம் தற்போது ஓலா எலக்ட்ரிக் மீது திரும்பியுள்ளது. எவ்வாறாயினும், சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பதால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
Edited by Siva
