தொடர்புடைய செய்திகள்
- மூன்று நாட்களில் சுமார் 33.9% உயர்வு.. உச்சத்திற்கு சென்றது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகள்..!
- போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி: உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2700 புள்ளிகள் உயர்வு..!
- 12 மணிக்கு மேல் தலைகீழாக மாறிய பங்குச்சந்தை.. 1400 புள்ளிகள் குறைந்திருந்த சென்செக்ஸ் 185 புள்ளிகள் ஏற்றம்..!
- ஒரே ஒரு நாள் தான் ஏற்றம்.. மீண்டும் தலைகீழாக சரிந்த பங்குச்சந்தை..
- ட்ரம்ப் அறிவிப்பால் பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வு.. 1 மணி நேரத்தில் 13 லட்சம் கோடி ரூபாய் லாபம்...!
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தபோதிலும் உச்சத்துக்கு போன சென்செக்ஸ்.. 1100 புள்ளிகள் உயர்வு..!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கையால், இந்திய பங்குச்சந்தை இன்று பெரும் எழுச்சியுடன் தொடங்கியது.
காலை 9:26 மணி நிலவரப்படி, பிஎஸ்இ சென்செக்ஸ் 1,189.51 புள்ளிகள் உயர்ந்து 78,037.08 என்ற அளவிலும், என்எஸ்இ நிஃப்டி 366.40 புள்ளிகள் உயர்ந்து 24,209.05 என்ற அளவிலும் வர்த்தகமானது. குறிப்பாக ஆட்டோமொபைல் மற்றும் எப்எம்சிஜி துறை பங்குகள் இந்த ஏற்றத்திற்கு தலைமை தாங்கின.
ஈரான் - அமெரிக்கா இடையிலான சுமுகமான சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவை சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். உலகளாவிய மந்தநிலை குறித்த எச்சரிக்கைகள் இருந்தாலும், போர்ச்சூழல் விரைவில் முடிவுக்கு வரும் என முதலீட்டாளர்கள் நம்புவதையே இந்த உயர்வு காட்டுகிறது.
இத்தகைய ஏற்ற இறக்கமான சூழலில், முதலீட்டாளர்கள் பொறுமை காப்பது அவசியம். அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை அழுத்தம் பெரிய நிறுவன பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
