பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை நேற்று ஆரம்பத்தில் சரிய தொடங்கினாலும் பின்னர் படிப்படியாக உயர்ந்தது என்பதும் அதனை அடுத்து மீண்டும் சரிய தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 550 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 110 புள்ளிகள் சரிந்து 18010 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை மீளுமா அல்லது தொடர்ந்து சரிவில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva