ஞாயிறு, 16 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (10:42 IST)

வாரத்தின் முதல் நாளே உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

share
மும்பை பங்குச் சந்தை கடந்த வாரம் பெரும் சரிவு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள முதலீட்டை முதலீட்டாளர்கள் இழந்தனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த வாரம் வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 490 புள்ளிகள் உயர்ந்து 42144 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் வரை உயர்ந்தது 17 ஆயிரத்து 960 என்ற மொழிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva