வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:33 IST)

இரண்டாவது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்!

Share
வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 61,169 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி சுமார் 60 புள்ளிகள் உயர்ந்து 18176 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
பங்கு சந்தை தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பங்குச்சந்தையில் தற்போது முதலீடு செய்வது சரியான காலம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edted by Siva