ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:36 IST)

தொடர் சரிவில் சென்செக்ஸ்.. இன்றும் 550 புள்ளிகள் சரிவு

Share Market
இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் மிகப்பெரிய சரிவை கண்டது என்பதும் குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை 1000 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதையும் பார்ப்போம். 
 
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
சற்றுமுன் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 550 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 520 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 180 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 140 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் தொடர் சரிவில் இருப்பது முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது