நீண்ட ஏற்றத்திற்கு பின் சற்றே சரிந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நீண்ட ஏற்றத்திற்கு பின்னர் இன்று பங்குச்சந்தை சிறிதளவு சரிந்துள்ளது
இருப்பினும் சென்செக்ஸ் 67 ஆயிரத்தை தாண்டி இருப்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து 67002 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 19,803 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தையில் அதிக அளவு ஏற்றம் கொண்டிருப்பதை அடுத்து லாபத்தை புக் செய்யும் நோக்கில் முதலீட்டாளர்கள் ஈடுபட்டு வருவதால் பங்கு சந்தை சரிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இது தற்காலிக சரிவு என்றும் விரைவில் பங்குச்சந்தை மீண்டும் உயரும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Edited by Siva