பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. 58 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்த சென்செக்ஸ்..!
மும்பை பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக ஒரு நாள் ஏறினால் நான்கு நாள் இறங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நேற்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து 57,180 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர் 58 ஆயிரத்துக்கும் குறைவாக வர்த்தகமாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 115 புள்ளிகள் சார்ந்து 16,865 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் சென்செக்ஸ் ஐம்பதாயிரம் வரை வரும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva