2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த சென்செக்ஸ்!
இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்த நிலையில் இன்று திடீரென சுமார் 300 புள்ளிகள் சரிந்து உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் 290 புள்ளிகள் குறைந்து 60 ஆயிரத்து 688 என்ற புள்ளிகளில் வர்த்தகம் வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி சுமார் 100 புள்ளிகள் குறைந்து 18,019 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் எனவே முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva