பெட்ரோல் & டீசல் விலை உயர்வு - கடந்து வந்த பாதை!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை 105 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது.
இந்தியாவில் கடந்த மாதம் 28 ஆம் தேதிக்கு பின் 21 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.6.40 அதிகரித்து இருக்கிறது. டீசல் விலையும் செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு பின் 24 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் ரூ.7.70 ஏற்றம் கண்டிருக்கிறது.
முன்னதாக கடந்த மே 4 முதல் ஜூலை 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.44 வரையும், டீசல் விலை ரூ.9.14 வரையும் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.107.59, மும்பையில் ரூ.113.46 ஆகவும், பெங்களூருவில் ரூ.111.34 ஆகவும், சென்னையில் ரூ.104.68 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.108.11 ஆகவும் உள்ளது. இதே போல் டீசல் விலை டெல்லியில் ரூ.96.32 ஆகவும், மும்பையில் ரூ.104.38 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99.43 ஆகவும், சென்னையில் ரூ.100.74 ஆகவும் உள்ளது.