2023-24 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் எப்போது? சலுகைகளை அறிவிப்பாரா அமைச்சர் நிர்மலா சீதாராமன்?
2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகி விட்டன
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இரண்டு கட்டங்களாக நடைபெற திட்டமிட்டிருப்பதாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகை அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது
கொரோனா வைரஸ் என்ற கடினமான காலம் முடிந்து தற்போது மீண்டும் நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் பல சலுகைகளை எதிர்பார்க்கலாம் என்றும் அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
Edited by Siva