1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Markets Open Week Lower: Sensex and Nifty Decline

வாரத்தின் முதல் நாளே சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 238 புள்ளிகள் சரிந்து 82264 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 72 புள்ளிகள் சரிந்து 25207 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இண்டிகோ, மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டைட்டன் உள்ளிட்ட பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.
 
அதேபோல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஐடிசி, ஜியோ ஃபைனான்ஸ், சன் ஃபார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளின் விலை சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.200 உயர்வு..!