புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 10 டிசம்பர் 2025 (09:48 IST)

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவில் இருந்தது என்பதும், இரண்டே நாட்களில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில், இரண்டு நாள் சரிவுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 230 புள்ளிகள் உயர்ந்து 84,989 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 25916 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், சிப்லா, இண்டிகோ, இன்ஃபோசிஸ், ஓ.என்.ஜி.சி., சன் பார்மா, டாடா கன்ஸ்யூமர், டைட்டன் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva