வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:53 IST)

திடீரென விலை குறைந்த தங்கம்- சவரனுக்கு 408 ரூபாய் குறைவு

சமீபகாலமாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் மதிப்பு தற்போது திடீர் சரிவை சந்தித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்திய பங்கு சந்தையில் தங்கத்தின் மதிப்பு மாறுகிறது. நேற்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு அவுண்ஸுக்கு 67 டாலர் அதிகரித்து 1529 டாலராக இருந்தது. இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 192 ரூபாய் அதிகமாகியிருந்தது.

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வந்ததால் ஆபரண தங்கத்தின் விலை 29 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 34 டாலர்கள் குறைந்து 1498 டாலராக உள்ளது. இதனால் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 28,608 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை தற்போது குறைந்திருப்பது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சர்வதேச சந்தையின் மதிப்பிற்கு ஏற்ப இது கூடவும், குறையவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.