ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 7 மே 2025 (10:02 IST)

போர் பதட்டம் இருந்தும் தங்கம் விலை இன்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Gold
பொதுவாக இரண்டு நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் ஏற்பட்டால் பங்குச்சந்தை சரியும் மற்றும் தங்கம் விலை உயரும் என்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் போர் பதட்டம் இருந்து வரும் நிலையில் தங்கம் விலை இன்று சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,100
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,075
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,800
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,600
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,927
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,900
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,416
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  79,200
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.111.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.111,000.00
 
Edited by Siva