செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (10:21 IST)

சவரன் 57 ஆயிரத்தை நெருங்கி வரும் தங்கம்..! - இன்றைய நிலவரம் என்ன?

Gold

நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் இன்றும் விலை உயர்வை சந்தித்துள்ளது.

 

 

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது. தற்போது பல நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதால் தங்கத்திற்கான தேவையும், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.56,760 ஆக விற்பனையாகி வந்த நிலையில் இன்று மேலும் ரூ.200 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.25 விலை உயர்ந்து ரூ.7,120க்கு விற்பனையாகி வருகிறது.

 

தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் சவரன் ரூ.57 ஆயிரத்தை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்கும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K