1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (16:28 IST)

சோகத்திலும் ஒரு சாதனை – வரலாறு படைக்கும் ராகுல் காந்தி !

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 8 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னனியில் உள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக  கிட்டதட்ட 347 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் மிகக் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளன. இதனால் பாஜக தணிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான முடிவுகள் தெரியவர மாலை ஆகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.  மோடி போட்டியிட்ட வாரனாசி தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் பல இடங்களில் மோசமான வாக்குகளைப் பெற்றாலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது. அவர் போட்டியிட்டுள்ள வயநாடு தொகுதியில் அவர் கிட்டதட்ட 8 லட்சம் வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். இதுவரை இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் யாரும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பைடத்தக்கது. அதே சமயம் அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வயநாடு தொகுதியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் ராகுல் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இடதுசாரி வேட்பாளர் பி பி சுனீர் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.