வாய் சவடால் எல்லாம் வீணா போச்சே... கடைசி நேரத்தில் மெகா கூட்டணிக்கு ஆதரவு!!

Last Updated: செவ்வாய், 26 மார்ச் 2019 (14:02 IST)
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணிக்கு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கடைசி நேரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை அக்கட்சி தலைவர் சரத்குமார் சற்றுமுன் அறிவித்தார். 
 
நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என வாய் சவடால் விட்ட சரத்குமார் இப்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த முடிவை அறிவிக்கும் போது அவர் பேசியது பின்வருமாறு, 
 
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன். தொங்கு நாடாளுமன்றம் அமைந்துவிடக் கூடாது என்பதால் ஆதரவு அளிக்கிறோம். சிறுபான்மையினருக்கு பிரதமர் மோடி காவலராக இருக்க வேண்டும் என கூறினார் சரத்குமார்.
 
இதற்கு முன்னர் கடந்த ஞாயிற்றுகிழமை, சரத்குமார் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :