திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (19:07 IST)

இதுவரை பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது எத்தனை கோடி தெரியுமா ?

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சுப்பிரமணியனுக்குச் சொந்தமான தோப்பில் கட்டிக்கட்டாக பணத்தை மறைத்து வைத்திருந்தாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இதனையடுத்து சுப்பிரமணியனின் பம்பு செட்டுக்குள் இருந்து ரு. 33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக தலைமைத் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அறிக்கை அனுப்பியுள்ளது.
 
இதேபோல் ஆண்டிப்பட்டியில் ரு. 1.48 கோடி  பறிமுதல் செய்தது . இதில் வார்டு வாரியாக குறிப்பிட்டு 97 கவர்கள் இருந்த பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. பணம் பறிமுதல் தொடர்பாக தலைமைட் தேர்தல் ஆணையத்திற்கு வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியது.
 
இந்நிலையில் இதுவரை தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 208.27 கோடி பணமாகப் பறிமுதல் செய்துள்ளனர்.