திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (21:27 IST)

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சந்தேகம் எழுப்புகிறது - கமல்ஹாசன்

வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வருடம் கட்சி தொடங்கி இந்த வருடம் கெத்தாக தேர்தலைச் சந்திக்க உள்ளார் கமல்ஹாசன். அவரது மக்கள் நீதி கட்சியில் இருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக பல நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த கமல்ஹாசனிடம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தேர்தல் பிரசாரத்தில்  வாக்குசேகரிக்க மக்களிடம் செல்லும் போது அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. நல்ல திட்டங்கள் எங்கெங்கு இருந்தாலும் அவற்றை மக்களிடம் தர மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்யும்.
 
தேர்தலில் ரஜினி எனக்கு ஆதரவு தர வேண்டும் என திரும்பி திரும்பி வலியுறுத்த முடியாது. ஆனால் ரஜினி எனக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளார். ரஜினி எனக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. ரஜினி எனக்கு பிரசாரம் செய்தால் அது எனக்கு சந்தோஷம் தான் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதனையடுத்து வேலூர் காட்பாடி அருகே உள்ள காந்திநகர் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர் நடத்தினர். தேர்தல் ஆணையத்தில் பறக்கும் படையினர் அவர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்
 
மேலும் துரைமுருகனின் மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளரான போட்டியிடும் கத்ஃபிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரி மற்றும் பள்ளியில் வருமான அதிகாரிகள் சோதனை நடத்தினர். 
 
இதுகுறித்து செய்தியார்கள் கேட்ட போது. தேர்தல் ஆணையத்தில் நடவடிக்கைகள் சந்தேசகத்தைக் கிளபுகிறது என்று தெருவித்தார்.