1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: மதுரை , செவ்வாய், 26 மார்ச் 2024 (12:05 IST)

100சதவீதம் தேர்தல் வாக்குப்பதிவு - கல்லூரியில் விழிப்புணர்வு கோலப்போட்டி!

மதுரை மாவட்டம்  கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் வருவாய்த்துறை சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு குறித்து கோலப்போட்டி நடைபெற்றது.
 
இப்போட்டியில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100சதவீதம் வாக்குப்பதிவு, வாக்குக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெறக்கூடாது, அனைவரும் வாக்களிக்க வேண்டும், நியாமான முறையில் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 
இப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அன்பரசு பரிசினை வழங்கினார். 
 
இதில் கருமாத்தூர் வருவாய் ஆய்வாளர் சாந்தலட்சுமி, கோவிலாங்குளம் விஏஓ முருகன், விஏஓக்கள் ஜோதிராஜ், முத்துமணி, கிருஷ்ணமூர்த்தி, பவித்ரா மற்றும் மாணவர்கள் குழு தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.