1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (16:15 IST)

ஆட்டுக்கறி வெட்டி வாக்கு சேகரிப்பு..! கவனத்தை ஈர்த்த தேமுதிக வேட்பாளர்..!!

Dmdk Canditate
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசன் கசாப்புக் கடையில் ஆட்டுக்கறி வெட்டியும் பெரியோர்கள் காலில் விழுந்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
 
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.  மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காகத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தோசை சுடுவது, பூரி சுடுவது, டீக்கடையில் டீ போடுவது போன்று நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் 
 
இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சிவநேசன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். தேமுதிக வேட்பாளர் சிவநேசனுக்கு ஆதரவாக, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தஞ்சையை அடுத்த வாண்டையார் இருப்பு உள்ளிட்ட கிராமங்களில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
முன்னதாக, அப்பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் முன்னாள் அமைச்சர் காமராஜ், வேட்பாளர் சிவநேசன் உள்ளிட்டோர் சாமி வழிபாடு செய்து பிரச்சாரத்தைத் துவங்கினர். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், பெரியவர்கள் காலில் விழுந்தும் வேட்பாளர் சிவநேசன் வாக்கு சேகரித்தார். 

 
பின்னர், அங்குள்ள இஸ்லாமியர் வீட்டில் ஓட்டு கேட்கச் சென்றபோது, வேட்பாளர் சிவநேசன் அங்கிருந்த கறிக்கடையில் ஆட்டுக்கறியை வெட்டி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.