கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவனம்பட்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஊழியர் கூட்டத்திற்கு பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்...
பாராளுமன்ற தொகுதியில் போட்டி வேட்பாளர்களுடன் கிடையாது.
மக்களை சந்தித்து ஒரே ஒரு விஷயத்தை சொல்லவேண்டும், பா.ஜ.க கொடுத்த
295 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும்.
திமுக சொல்வது போல கொடுத்த வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப கொடுக்கவில்லை.
கோவைக்கு மோடி என்ன செய்திருக்கிறார் என்பது ஒவ்வொரு சாமானிய மக்களுக்கும் தெரியும்.அதை அண்ணாமலை வந்து சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.
கோவையில் நடந்துள்ள அனைத்து வசதிகளும் பாஜகவின் ஆட்சியில் பத்தாண்டுகளில் நடைபெற்றது என தெரிவி்த்த அவர்,
கமிஷன் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே பாலம் கட்டக் கூடிய கட்சி, பாலம் ஏன் கட்டுகின்றனர் என்பது அவர்களுக்கு தெரியாது, கோவையை அந்த அளவுக்கு நாசப்படுத்தி வைத்திருக்கிறார்கள்
ஊழல் செய்வதற்காக மட்டுமே ஆட்சியில் இருந்த ஒரு கட்சி , வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள்.
கோயம்புத்தூர் இவர்கள் கொள்ளை அடிப்பதற்காக , கமிஷன் பெறுவதற்காக வளர்ச்சி என்ற வீக்கத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் எனவும், இதை நான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை மக்களுக்கு தெரியும்.
என்னுடைய சண்டை வேட்பாளர்களுடன் கிடையாது,
கோவை பாராளுமன்றத்தை எப்படி மாற்றிக் காட்டப் போகிறோம் என்பதற்காகவே போட்டியிடுகிறோம் எனவும், அண்ணாமலை ஹாட் லைனாக மத்திய அரசுக்கும் கோவைக்கும் இருப்பார் எனவும்,
ஒரே ஒரு பட்டன் மூலம் தீர்வை காண்பதற்கான பணியை , இணைப்பு பலமாக இருந்து கோவை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்.
எடப்பாடியாரிடம் பிரச்சனை என்னவென்றால் யார் என்ன சொல்கின்றனர் என்பதை முழுமையாக கேட்பது இல்லை.
அவர் கேட்கக்கூடிய தன்மையில் இல்லை, அவரிடம் அரகன்ஸ் வந்துவிட்டது.
நாம் சொல்வது பணம் கொடுக்காமல் கோவையில் ஜெயித்து காட்ட முடியும் என்பதுதான்.
பாஜக தொண்டர்கள் யாரும் காண்டிராக்டர் கிடையாது , திருச்சி உள்ளிட்ட இடங்களில் யாரை நிறுத்தியிருக்கின்றார்கள் என பாருங்கள், வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே தெரிந்து விடும்.
தேசிய ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் தங்களது கை காசை போட்டு கட்சிக்காக செலவழிப்பார்கள் , சொந்த காசை கட்சி பணிக்காக செலவழித்து செய்வார்கள், இதுதான் மாற்று அரசியல்.
மாற்று அரசியல் செய்யாமல் கல்லாப்பெட்டி கட்டியவர்களுக்கு என்ன தெரியும்.
யார் என்ன சொல்கின்றனர் என்பதை காது கொடுத்து கேட்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி டீக்குடிப்பதற்கு கூட யாரிடம் பணம் வாங்கித்தான் குடிப்பார் போல. அதனால்தான் அதை உதாரணமாக பேசி இருக்கின்றார்.
நாங்கள் டீ குடிப்பது என்றாலும் சொந்தக் காசில் டீ குடிப்போம்.
இதுதான் எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.
உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை கையில் எடுத்துக் கொண்டு செல்லும் அளவிற்கு தான் அவரது அறிவு இருக்கிறது.
அரசியலில் பக்குவப்படாதவர் அவர்,
தாத்தா , அப்பா பெயரை இன்சியலாக வைத்துக் கொண்டு வந்தால் இந்த புத்தி தான் இருக்கும்.
2026 முதல் பாதியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்.
கலைஞர் கருணாநிதி குளித்தலையில் கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அவர், 33 மாதங்களாக இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. நடைபெறும் தேர்தலில் இதற்கான பாடத்தை மக்கள் கொடுப்பார்கள்.
அதிமுக, திமுக ஏப்ரல் பத்தாம் தேதிக்கு பின்பு ஒன்று சேருவார்கள். கடைசி பத்து நாட்களில் தான் பங்காளி கட்சிகளின் சுய ரூபத்தை பார்க்க முடியும்.
பணபலம் , பணம் படை பலத்தை வைத்து அண்ணாமலையை ஜெயிக்க பார்க்கிறார்கள்.
ஏப்ரல் பத்தாம் தேதிக்கு மேல் இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு விட்டுக் கொடுத்து இன்னொரு வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை மடை மாற்ற முயற்சிப்பார்கள்.
கேரளாவில் இப்படி நடக்கும். கோயமுத்தூரில் தமிழக அரசியலில் முதல் முறையாக இங்கு நடக்கும். இதைத் தாண்டி என்னுடைய வெற்றி இருக்கும்.
பங்காளி கட்சிகள் என்ன வேணாலும் செய்து கொள்ளட்டும். அதற்கெல்லாம் கோவை மக்கள் மயங்க போவது கிடையாது. நாங்களும் பயப்பட போவது கிடையாது.
இப்பொழுது இருப்பவர்கள் யாரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கிடையாது, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 30 சதவீத கமிஷன் அடித்துக் கொண்டு இவர்கள் பேசுகிறார்கள், இவர்கள் என்ன கோவையில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
கோவை நகரம் சூடானதுதான் மிச்சம்
கோவை நகரில் ஆரோக்கியமான சாலைகள் இல்லை. பார்க் இல்லை .என்ன செய்திருக்கிறார்கள். இங்கே நீங்கள் வளர்ந்து விட்டால் வளர்ச்சியா?
10 ஆண்டுகளாக கொள்ளையடித்து தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுப்பதற்காக செலவழித்தால் அது வளர்ச்சியா அது வீக்கம்.
கோவை சார்ந்த தேர்தல் அறிக்கை ஏப்ரல் இரண்டாவது வாரம் வெளியிடப்படும். சட்டமன்ற வாரியாக புத்தகமாக கொடுக்கப்படும்.
6 சட்டமன்றத்திற்கும் தனித்தனியாக டைம்லைன் வைத்து கொடுக்கப்படும்.
ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு ஒருவருக்கு தகுதி இல்லை என்றால் அது ஸ்டாலினுக்குதான். ரஷ்யாவின் ஸ்டாலினுக்கும், இங்கிருக்கும் ஸ்டாலினுக்கும் எந்த வித மாறுபாடும் கிடையாது.
ஜனநாயகத்தை பற்றி பேச ஒரு தலைவருக்கு உரிமை இல்லை என்றால் அது அண்ணன் ஸ்டாலின் மட்டுமே என அண்ணாமலை பேட்டியின் போது தெரிவித்தார்.