ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு விவரம் வெளியானது

Last Modified வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (08:35 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் அவரது சொத்து விவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் விவரம் பின்வருமாறு:
 
ராகுலின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 15.9 கோடி. அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 5.8 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 10.08 கோடி என தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு வங்கிகளில் ரூ.17.93 லட்சம் டெபாசிட் மற்றும் பத்திரங்கள், பங்குகள் என ரூ.5.19 கோடி முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமக்கு ரூ.72 லட்சம் கடன் இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார். மேலும் தனக்கு எதிராக 5 வழக்குகள் இருப்பதாக ராகுல் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :