திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (09:05 IST)

7 பேர் விடுதலை நடக்கவே நடக்காது: அடித்து சொல்லும் சுப்ரமணியன் சுவாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் எந்த காலத்திலும் விடுவிக்கப்படமாட்டார்கள் என  பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில்  நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள்.  முருகன், நளினி , பேரறிவாளன் உள்பட ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. 
அதன்படி ஏழு பேர் விடுதலை குறித்து தீர்மானம் இயற்றிய தமிழக அரசு அந்த தீர்மானத்தை தமிழக கவர்னருக்கு அனுப்பியது. தமிழக கவர்னரின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் அடுத்த நிமிடமே ஏழுபேர் விடுதலை சாத்தியம் என்ற நிலையில் இதுகுறித்து கவர்னர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக 7 பேரின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 7 பேர் விடுதலை என்பது எக்காலத்திலும் நடக்காது. அது தேர்தல் அறிக்கையில் உள்ளதே என கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த அறிக்கையை போய் குப்பையில் போடுங்கள், 7 பேர் விடுதலை என்பது நாங்கள் இருக்கும் வரை நடக்காது என திட்டவட்டமாக பேசினார்.