வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (19:40 IST)

சீட்டு, நோட்டு, ஓட்டு... டைமிங்கில் ரைமிங்!! புகுந்து விளையாடும் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு வருகிறார். 
 
அதோடு, திமுக போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கு நேரடி பிரச்சாரத்திற்கு தயாராகியுள்ளார். இதனையடுத்து உதயநிதியின் பிரச்சார பயணம் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
 
அந்த வகையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கெளதம சிகாமணியை ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 
திமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்து எதிர்க்கட்சிகள் பயந்துபோய் உள்ளது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி இல்லை மோசடி கூட்டணி என விமர்சித்தார். 
 
மேலும், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த பாமகவும், தேமுதிகவும் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது, சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் ஓட்டுக்காகவும்தான் என டைமிங்கில் ரைமிங்காக பேசி மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.