புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (21:44 IST)

முதல்வர் ஈபிஎஸ் வாகனம் முன் திடீரென பாய்ந்த மர்ம பெண் யார்? பெரும் பரபரப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில வாரங்களாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகளில் பிசியாக இருந்த நிலையில் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தையும் தனது சொந்த ஊரில் இருந்து தொடங்கியுள்ளார்.
 
இந்த நிலையில் இன்று அவர் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதியில் இன்று தீவிர பிரச்சாரம் செய்தார். மக்களை நேரில் சந்திப்பது, சாலை ஓரத்தில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பது போன்ற மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்த நிலையில் பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்து கொண்டிருந்த முதலமைச்சர் பழனிச்சாமியின் வாகனம் முன் ஒரு பெண் திடீரென பாய்ந்ததால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 
 
முதல்வரின் பாதுகாவலர்கள் அந்த பெண்ணை பிடித்து அங்கிருந்து அப்புறபடுத்தினர். முதல்வர் வாகனம் முன் பாய்ந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முதல்வரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த பெண், முதல்வரின் வாகனம் முன் பாய்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது