புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (12:23 IST)

முட்டாள்கள் ஆறுகளை இணைப்பதாக பேசுகிறார்கள் – பாஜக & ரஜினியைக் கலாய்த்த சீமான் !

பாஜகவின் நதிநீர் இணைப்பு என்பது முட்டாள்தனமான செயல் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு தனது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று பேசிய சீமான் ‘நதிகளை இணைப்பதாக சில முட்டாள்கள் பேசிக்கொண்டு கோடிகளை ஒதுக்கப்போவதாக சொல்லியுள்ளனர். ஏரி, குளம், கிணறு மற்றும் கம்மாயை நமது முன்னோர்கள் வெட்டினார்கள். ஆற்றை நாம் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பிச்சை. எங்கே மேடு, எங்கு பள்ளம், வளைவு, நெளிவு என அதுவே உருவாக்கியது ஆறு. அதை எப்படி இணைப்பீர்கள் ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக பாஜகவின் நதிநீர் இணைப்புக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை மூளை இல்லாத நடிகர் என்றும் மோடிதான் அவரது இயக்குனர் என்றும் சீமான் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.