புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (13:10 IST)

ஓட்டு போட்ட மை விரலைக் காட்டினால் ... தள்ளுபடியில் உணவு : நோ கண்டிஷன்

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒட்டு போட்டுவிட்டு விரலில் மையுடன் வருபவர்களுக்கு 10% தள்ளுபடி என ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
சென்னையில் உள்ள பிரபல  நட்சத்திர ஹோட்டல் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
 
சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ளது கிளரியன் பிரசிடெண்ட் நட்சத்திர ஹோட்டல் தேர்தல் நாளான இன்றுமுதல் வரும் 21 ஆம் தேதி வரை 50% தள்ளுபடி அறிவித்துள்ளனர்.
 
மேலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டு போட வரலாம் என்றும் ஆனால் விரலில் மையுடம்  வர வேண்டுன் என்று தெரிவித்துள்ளனர்.