ராகுல் சென்ற விமானத்தில் எஞ்சின் கோளாறு – பாதி வழியில் கண்டுபிடிப்பு !

Last Modified வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (15:41 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக மீண்டும் டெல்லிக்கே திரும்பியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பீகாரில் பீஹார் , ஒடிசா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடக்க இருக்கும் பிரச்சாரத்துக்காக டெல்லியில் இருந்து பீஹார் தலைநகர் பாட்னாவுக்கு தனி விமானம் சென்றார். ஆனால் விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விமானத்தில் எந்திரக் கோளாறு இருப்பதை விமானிக் கண்டு பிடித்துள்ளார்.

அதன் பின்னர் பயணத்தைத் தொடர முடியாத காரணத்தால் விமானம் மீண்டும் டெல்லிக்கே  பத்திரமாக திரும்பியுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றி ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்த இருக்கிறது.

இது தொடர்பாக தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ள ராகுல் காந்தி ‘பாட்னாவுக்கு நாங்கள் சென்ற விமானத்தில் எந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லிக்கே திரும்பியுள்ளோம். இதனால் நடக்க இருந்த பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்கள் தாமதமாகியுள்ளன. தாமதத்துக்கும் அசௌகர்யத்துக்கும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :