புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:59 IST)

வாக்குச்சாவடியில் செல்போனுக்குத் தடை – வீட்டிலேயே வைக்க அறிவுரை !

வாக்குச்சாவடிக்குள் செல்போனுக்கு அனுமதி இல்லாததால் வீட்டிலேயே வைத்துவிட்டு அறிவுறுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி, கமல் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் செல்லும் வாக்காளர்கள் செல்போனை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  மேலும் வாக்குச்சாவடிக்கு வெளியில் செல்போனை பத்திரப்படுத்தி வைக்கும் வசதிகள் செய்யப்படவில்லை. அதனால் வாக்காளர்கள் செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தேவையற்ற நிகழ்வுகளைத் தடுக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.